ராணிப்பேட்டை அடுத்த: அக்ராவரம்‌ மலைமேடு பகுதியை சேர்ந்தவர்‌ வாசு(65). இவரது மகன்‌ ராஜேஷ்‌(30), வெல்டிங்‌ தொழிலாளி. வாசு தினமும்‌ குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும்‌ மகனிடம்‌ தகராறு செய்வாராம்‌. 

அதேபோல்‌, கடந்த 27ம்‌ தேதி போதையில்‌ வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்‌. வாக்குவாதம்‌ முற்றியதில்‌ ஆத்திரம்‌ டைந்த வாசு, வீட்டில்‌ இருந்த. சுத்தி தலை மீது தாக்கியுள்ளார்‌. 

இதில்‌, படுகாயமடைந்த ராஜேஷ்‌ வாலாஜா அரசு மருத்துவமனையில்‌ அனுமதிக்‌ கப்பட்டார்‌. பின்னர்‌, வேலூர்‌ அரசு மருத்துவமனைக்கு, மாற்றப்பட்டார்‌. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை: அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்த புகாரின்பேரில்‌ சிப்காட்‌ இன்ஸ்பெக்‌ டர்‌(பொறுப்பு) சாலமன்ராஜா, சப்‌-இன்ஸ்பெக்டர்‌ சிதம்பரம்‌ ஆகியோர்‌ நேற்று வழக்குப்பதிந்து வாசுவை கைது செய்து, கோர்ட்டில்‌ ஆஜர்படுத்தி சிறையில்‌. அடைத்தனர்‌.