மதுரையில் நடிகர் பாலசரவணனின் தந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலைக் கொரோனாவால் காலமானார்.

நடிகர் பால சரவணனின் தந்தை S. A. ரெங்கநாதன் ( 60 ) கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த சில நாட்களாகச் சிகிச்சையில் இருந்தவர் இன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.பால சரவணன் தங்கை கணவர் மே மாதம் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலசரவணனின் குடும்பத்தினருக்கு திரை உலகினர் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். இவரது வீடு மதுரை அருகே பரவையில் உள்ளது.