இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் இந்தியா ஹோம்ஸ் இணைந்து நடத்தும் இலவச கொரானா தடுப்பூசி முகாம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், ஆர், காந்தி கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை துவக்கிவைத்தார்.
மேலும் இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல் ஈஸ்வரப்பன் சார் ஆட்சியர் இளம்பகவத் நகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சாந்திவிமலா ரோட்டரி நிர்மல் ராகவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் வர்த்தகர் அணி முரளி மற்றும் மருத்துவ ஊழியர்கள் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.