குறள் : 409
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
மு.வ உரை :
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
கலைஞர் உரை :
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை :
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
Kural 409
Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum
Katraar Anaiththilar Paatu
Explanation :
The unlearned though born in a high caste are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
இன்றைய பஞ்சாங்கம்
09-06-2021, வைகாசி 26, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 01.58 வரை பின்பு அமாவாசை. கிருத்திகை நட்சத்திரம் காலை 08.44 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் காலை 08.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. போதாயண அமாவாசை.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிப்பலன் - 09.06.2021
மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் உதவிகள் கிட்டும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழில் வியாபாரத்தில் வெளிவட்டார நட்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கிய ரீதியாக செலவுகள் ஏற்படும். சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை சேரும். உத்தியோத்தில் புதிய நட்பு மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் மூலம் கடன் பிரச்சினை தீரும். தெய்வ வழிபாடு நல்லது.
கன்னி
இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் பெருகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,