ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலணியை சேர்ந்தவர் பஸ்வான்(26). இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் பஸ்வான் ஆவதம் கிராமம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனியாக நின்றிருந்தபோது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு ரவுடி பஸ்வானை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த அரக்கோணம் தாலூகா போலீசார், சம்பவம் இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு வந்து மாவட்ட எஸ்.பி ஓம் பிரகாஷ்மீனா சம்பவ இடத்தை பார்வையிட்டுக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும்படி உத்தரவிட்டார். 

இதனைத்தொடர்ந்து ஆவதம் பகுதியைச் சேர்ந்த 4பேரை பிடித்துப் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பஸ்வான் பகுதியில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த2015இல் ஆவதம் பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவரிடம தகராறு செய்தபோது அவருடைய தம்பி லோகேஷை பஸ்வான் கொலை செய்த்தாகக் கூறப்படுகிறது.

பின்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பஸ்வான் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டடு வந்திருந்துள்ளார். இந்நிலையில் மாவட்டம் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தின் எஸ்.பி-யாக மயில்வாகனன் இருந்தபோது தனிப்பிரிவு போலீசார் முடுக்கி விடப்பட்டு பல முக்கிய குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது பஸ்வான் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி இருந்தான். தற்போது அவர் இடமாறுதல் ஆனதையறிந்து பஸ்வான் சுதந்திரமாகச் சுற்றிவந்தான் இதனையறிந்த கொலையுண்ட லோகேஷின் உறவினர்கள் பஸ்வானை பழிவாங்கத் தொடர்ந்து கண்காணித்த நிலையில் அவன் சம்பவ இடத்தில் தனித்திருந்ததை அறிந்து ஆவத்த்தைச் சேர்ந்த அன்பரசு(23), சிவா(19), கிருஷ்ணமூர்த்தி(19), விக்கி(எ)விக்னேஷ், சூர்யா(எ) சூர்யமூர்த்தி, ரஞ்சித், சதீஷ்(எ)அஜீத் ஆகியோர் சேர்ந்து கொலைசெய்ததாகப் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைப் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சோளிங்கர்அடுத்த பாணாவரம் காப்புக்காட்டில் ஒளிந்திருப்பதாகத் தகவல்கிடைத்ததின் பேரில் சென்ற பதுங்கி இருந்தவர்களைப் பிடித்துக் கைது செய்தனர் 
அரக்கோணம் பகுதியில் கடந்த 6ஆம் தேதி முதல்கார்த்தி, கௌதம், கோதண்டனைத் தொடர்ந்து 4ஆவதாக ரவுடி பஸ்வான் கொலையென 4பேருமே கொலைக் குற்றவாளிகள் என்பதும் நடந்த கொலைச் சம்பவங்கள் அனைத்தும் பழிவாங்கிய செயலாக உள்ளதால் தனிப்பிரிவு போலீசார் கண்காணித்து உடனுக்குடன் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தால் இது போன்ற கொலைசம்பவங்கள் தடுத்திட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் தொடர்ந்து நடந்து வரும் இது போன்ற கொலைகளால் அரக்கோணம் பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும்பீதியை ஏற்படுத்துயுள்ளது.