சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவரும், இவருடைய தந்தை ராஜேந்திரன், தாயார் வீரம்மாள் ஆகியோரும் மருத்துவ சிகிச்சைக்காக, ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநேர் பகுதிக்கு ஆட்டோவில் சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு திரும்பினர். 

ஆட்டோவை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தபோது, ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். 

வாலிபர் பலி

ராஜ்குமார் உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார். 
ராஜ்குமாரின் தந்தை ராஜேந்திரன், தாயார் வீரம்மாள் ஆகியோர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவை ஓட்டி வந்த சுரேஷ் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்