👉 1959ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் பிறந்தார்.

👉 1910ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஹோவர்கிராஃப்ட்டை(HoverCraft) கண்டுபிடித்த கிறிஸ்தோபர் கொக்கரல் பிறந்தார்.

👉 1919ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டத்திற்கு அமெரிக்க சட்டமன்றம் அனுமதி அளித்தது.


நினைவு நாள் :-

வ.வே.சுப்பிரமணிய ஐயர்
🏁 சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரியில் பிறந்தார்.

🏁 இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம், அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.

🏁 இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

🏁 இவர் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சவாதியாக மாறினார்.

🏁 இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், 'கம்பராமாயணம் - எ ஸ்டடி', மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

🏁 தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் தன்னுடைய 44வது வயதில் 1925ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
🎼 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1946ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

🎼 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார். இவருக்கு 2016ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. 

🎼 தமிழில் முதன்முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார். அதை தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் என அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.

🎼 பத்மஸ்ரீ (2001), பத்மபூஷன்(2011), கலைமாமணி விருது, ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றுள்ளார்.

🎼 60-களில் தொடங்கிய இவரது இசைப்பயணம் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமையுடன் 73வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.