ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மூர் ஒழுங்கு விற்பனை கூடத்திற்கு நேற்று சுமார் 2552 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன

அதில் லாலாப்பேட்டை சோளிங்கர் பொண்ணை அரக்கோணம் காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை. ஆற்காடு விளாப்பாக்கம். திமிரி உள்ளிட்ட நகரம் மற்றும் கிராமங்களிலிருந்தும் அதனை சுற்றி உள்ள பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பல்வேறு நெல் மூட்டைகளை ஆயிரக்கணக்கில் டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் அம்மூர் ஒழுங்கு விற்பனை கூடத்திற்கு நெல் மூட்டைகள் எடுத்து வந்து விற்பனை செய்து பணத்தை பெற்றுக்கொண்டு சென்றனர்

இந்நிலையில் வாலாஜா அடுத்த அம்மூர் ஒழுங்கு விற்பனை கூடத்திற்கு நேற்று சுமார் 2. 552 நெல் மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.