ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, கணேசன், ஜான் சேவியர் மற்றும் போலிசார் நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை, சிப்காட் உட்பட பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக குடிபோதையில் ரகளை செய்தவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்த செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனராம். 

இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், ராணிப்பேட்டை பழைய ஆற்காடு ரோட்டை சேர்ந்த காதர்(34), ராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் புதிய தெருவை சேர்ந்த அருண்(29), புளியங்கண்ணுவை சேர்ந்த தினேஷ்(30) ஆகியோர் என தெரியவந்தது.

உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.