ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாச்சலம் மாநில செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் மாநில மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணசாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் கார்த்தியாயினி பங்கேற்று சிறப்புரையாற்றினார் இதில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற நிகழ்ச்சியை வருகிற 1ம் தேதியிலிருந்து நடத்தப்படும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை விளக்கும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க கட்சித் தொண்டர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.