ராணிப்பேட்டைமாவட்டம் அரக்கோணம் பகுதியில் தொடர் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியிலும் பீதியிலும்: ஆழ்ந்துள்ளனர்.
இந்திலையில், அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், அரக்கோணம் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், குற்ற. சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரவுடிகளை ஒழிக்க வேண்டும். நிலுவையில் உள்ள. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் வழக்குபதிவு செய்ய வேண்டும். ஒருபைக்கல் மூன்று பேர். சென்றால் உடனடியாக வழக்கு பதிவு செய்து, வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் போலீசா ருக்கு எஸ்பி வழங்கொர்.
இதில், அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், அரக்கோணம் இன்ஸ் பெக்டர்கள் கோகுல்ராஜ் (தாலுகா) முரளிதரன்( டவுன்) மற்றும் டவுன் தாலுகா,தக்கோலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.