ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி, யாதவர் தெருவில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணர் பஜனை கோயில் புதுப்பிக்கப்பட்டது.

அதன் கும்பாபிஷேகத்தையொட்டி கோ பூஜை, பிரதான ஓமங்கள் செய்யப்பட்டு கோயில் கலசத்தின் மீது நேற்று 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.