ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான திரு ஆர் காந்தி தலைமையில் நேற்று சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வரும் ரோப்கார் திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது ரோப்கார் திட்ட பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது, மேலும் சோளிங்கர் நரசிம்மர் ஆலயத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.