அரக்கோணம்: திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் வங்கி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அலுவலராக பணிபுரிந்து வரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பனோத் கார்த்திக்குமார்(27). இவர் சாலை கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் அப்பகுதியில் உள்ளவர்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவயிடத்திற்கு வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது போலீசார் கதவை உடைத்து அறையினுள் பார்த்தபோது பனோத் கார்த்திக் குமார் மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக இருந்தார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் பனோத் கார்த்திக் குமாருக்கு வீட்டில் உள்ளவர்களால் திருமண ஏற்பாடுகள் செய்ததாகவும் கார்த்திக்கு திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்ததையடுத்து மேலும் இது குறித்து தொடர்ந்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.