ஆற்காடு: ரத்தினகிரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடி கிருத்திகை விழாவில், ஏராளமானோர் காவடி எடுப்பார்கள். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக அடுத்த மாதம் 2 ம் தேதி நடக்கும் ஆடிகிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டது.இது குறித்து ரத்தினகிரி கோவில் அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஆடிகிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வரும் 2 ம் தேதி அதிகாலை 4:00 முதல் இரவு 8:00 வரை தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.