ராணிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை தலைமை நீதிபதி திடீர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை திடீர் ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி வந்திருந்தார். தலைமை நீதிபதியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா, தலைமை குற்றவியல் நீதிபதி மகேஸ்வரி பானுரேகா, ராணிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஜான் சுந்தர்லால் சுரேஷ், ரேவதி, தெய்வீகன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அகோ.அண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி ஆலோசனைகளை வழங்கினார். இதனையொட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அவர் மரக்கன்று நட்டார்.

நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.