அரக்கோணம் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் நகராட்சி நிா்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளில் நடைபெறுவதாகப் புகாா் தெரிவித்து, தூய்மை பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிரந்தரத் தூய்மைப் பணியாளா்கள் 120 பேருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவதில்லை என்றும், பிஎஃப் பணம் பிடித்தம், கணக்கில் வரவு வைத்தல் எல்.ஐ.சி. பிடித்தம் முறையான ஊதியம் வழங்குவதில்லை என்றும் அவா்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 300 போ் விகிதம் மாதம் ரூ.24 லட்சம் வரை கணக்கு காட்டி தனியாா் ஒப்பந்ததாரரிடம் முறைகேடு நடத்தப்பதாகவும்,டெங்கு பணியில் ஏழு போ் பணியாற்றி வரக்கடிய நிலையில் 130 போ் பணியாற்றுவதாகக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும் அவா்கள் புகாா் தெரிவித்தனா்.