ராணிப்பேட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு லிகாய் முகவர்கள் சங்கத்தினர் நாடு தழுவிய உணவு நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராணிப்பேட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு லிகாய் முகவர்கள் சங்கத்தினர் நாடு தழுவிய உணவு நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார், செயலாளர் எம் செல்வம் வரவேற்றார், பொருளாளர் ஏழுமலை முகவர்கள் நலன் குறித்து உரையாற்றினார். 

கௌரவத் தலைவர் கே ரவிக்குமார் வணிகம் குறித்து பேசினார் கோட்ட பொதுச்செயலாளர் தா. வெங்கடேசன் கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினார் மேலும் இதில் எல்ஐசி பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடும் முடிவைத் திரும்பப் பெறு , நேரடி பாலிசி விற்பனையை கைவிடு. கோவிட் தொற்றினால் உயிரிழந்த முகவர்கள் குடும்பங்களுக்கு ரூ , 25 இலட்சம் நிவாரணம் வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினார்.

துணைத்தலைவர் பரசுராமன் நன்றி தெரிவித்தார் இதில் ஏராளமான முகவர்கள் பங்கேற்றனர்