ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் வருவாய்த்துறையினர் ஆற்காடு அடுத்த குக்குண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் ஆய்வு செய்தனர். 

அப்போது முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மேலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அரசு விதிமுறைகளை மீறி காணப்பட்டது.எனவே அந்த கம்பெனிக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 

மேலும் புதுப்பாடி கூட்ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக நபர்களை ஏற்றிவந்த பஸ்சுக்கு அபராதம் விதித்தனர்.