ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லம் சார்பில் ஆற்காடு, ரத்தினகிரி, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்றவர்கள், ஏழை, எளியோர்களை வேன் மூலம் தேடிச்சென்று மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத் துவக்க விழா ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.