சோளிங்கர் அருகே 1 லட்சத்திற்கு மணல் குவியல்கள் ஏலம் விடப்பட்டது. 

சோளிங்கர் வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்து கரிக்கல் நரசிங்கபுரம் கிராம ஓடையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சோளிங்கர் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாசில்தார் வெற்றிக்குமார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று மணல் குவியல்களை கண்டறிந்து பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து, நேற்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் மணலை ஏலம் விட்டனர்.

அங்கு குவிக்கப்பட்டிருந்த 42 யூனிட் மணல் ₹1 லட் சத்து 25 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.