தமிழகத்தில் தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதுஅதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து இயங்கி வருகிறது. 

சோளிங்கரிலிருந்து வேலூர், திருத்தணி, அரக்கோணம், பள்ளிப்பட்டு, ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு 50 சதவீத பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது. 

இந்நிலையில் சோளிங்கர்- வேலூர் செல்லும் அரசு பஸ்ஸில் கொரோனா அச்சம் சிறிதும் இல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக அளவில் பயணிகள் கூட்டமாக நின்றபடி கொரானா 3 ம் அலையை வரவேற்கும் விதமாக பயணம் செய்கின்றனர். இதனால் மீண்டும் நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.