ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை சிறு, குறு விவசாயிகளுக் கான சான்றுகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளது. 

இது தொடர்பாக ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட் ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன் பெற சிறு, குறு விவசாய சான்று வழங்கும் சிறப்பு முகாம் நாளை பிர்கா அளவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

நடப்பாண்டில், ராணிப்பேட்டைமாவட்டத்தில் 2,800 எக்டேரில் செயல் படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு (21.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிறு குறு விவசாயிகளுக்கு 100 சத்வீதம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் பாசன சிறப்பு முகாம் கருவிகள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் அதற்கான சான்றிதழ் பெற வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

ஜூலை 31ல் நெமிலி, ஆற்காடு, வாலாஜா, கலவை, அரக்கோணம், சோளிங்கர் வட்டங்களுக்குட்பட்ட 22 பிர்கா வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடை பெறஉள்ளது. இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாய சான்றுகள் வழங்கப்படும். 

இத் திட்டத்தின் கீழ் பாசன கருவிகளை விவசாயிகள் இலவசமாக பெறலாம். இந்த அரிய வாய்ப்பை ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.