லிப்ட் கேட்ட இரண்டு பெண்களை காரில் கடத்திச் சென்று, 20 பவுன் நகை கொள்ளையடித்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். 

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் சுஜாதா, 45, இவரது உறவினர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சிவபுவனம்மாள், 65. இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் செல்வதற்காக சோளிங்கர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். அவர்களை ஏற்றிச் சென்ற டிரைவர், பள்ளிகொண்டா என்ற இடத்தில், இருவரையும் தாக்கி விட்டு, 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து, அவர்களை சத்துவாச்சாரியில் கீழே தள்ளி விட்டு காரில் தப்பிச் சென்றார்.

சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி, சென்னையை சேர்ந்த டிரைவர் பாபு, 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.