ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை  காவல் நிலையம் அருகே மகாதேவ மளிகை வீதியில் உள்ள அயாத்கான் (65) என்பவரின் அரிசி கடை இயங்கி வருகின்றது. 

இந்த நிலையில் கடையின் உரிமையாளர் நேற்று இரவு 7 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். பிறகு காலையில் வந்து பார்க்கும்போது கடையில் உள்புற உள்ள மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் சுமார் மூன்று லட்சம் ரூபாவை கொள்ளையடித்து சென்றனர். 

இந்த கொள்ளை குறித்து கடையின் உரிமையாளர் வாலாஜா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.