👉 1980ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்தார்.

👉 1928ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகர் எம்.எல்.வீ என அன்புடன் அழைக்கப்பட்ட எம்.எல்.வசந்தகுமாரி சென்னையில் பிறந்தார்.

👉 1883ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி மிகச்சிறந்த ஐரோப்பிய எழுத்தாளர்களில் ஒருவரான பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka) ஆஸ்திரியா ஹங்கேரி சாம்ராஜ்ஜியத்தின் (தற்போதைய செக் குடியரசு) பிராக் நகரில் பிறந்தார்.

👉 1844ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி ஐஸ்லாந்தில் (Eldey) கடைசிச் ஜோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.

👉 2006ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி பூமியில் இருந்து 432,430 கி.மீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


பிறந்த நாள் :-

எஸ்.ஆர்.நாதன்
👉 சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 1924ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார். 

👉 இவர் 1955-ல் மருத்துவ சமூக சேவகராக சிங்கப்பூர் சிவில் சேவையில்(Singapore Civil Service) தனது தொழிலை தொடங்கினார். மேலும், அரசுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இவர் திறம்பட பணியாற்றினார். அதன்பின் அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் தூதர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.

👉 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அதிபர் பதவியேற்ற போது உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது. அதிலிருந்து சிங்கப்பூரை மீட்டு வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். இதன் காரணமாக 2005ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

👉 தமிழக வம்சாவளியிலிருந்து சிங்கப்பூர் ஜனாதிபதியாக உயர்ந்த எஸ்.ஆர் நாதன் 92வது வயதில் (2016) மறைந்தார்.