🎾 1968ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பூனாவில் பிறந்தார். 

🎼 2009ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் மறைந்தார். 

✍ 1930ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி எத்யோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை வெளியிட்டது.

🏡 1955ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி டிஸ்னிலாந்து பூங்கா கலிஃபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

✍ 1965ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி பிரான்ஸையும், இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.

🏡 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி மிலேனியம் பூங்கா சிகாகோவில் அமைக்கப்பட்டது. 

📜 1661ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது.


பிறந்த நாள் :-

அருணா ஆசஃப் அலி

🏁 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) 1909ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஹரியானா மாநிலம் கால்கா நகரில் (அப்போது பஞ்சாப் மாநிலம்) பிறந்தார்.

🏁 இவர் சிறு வயதில் இருந்தே சுதந்திர வேட்கையும், துணிவும் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

🏁 1958-ல் டெல்லியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அமைதிக்கான லெனின் பரிசும், 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

🏁 நாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அருணா ஆசஃப் அலி 87வது வயதில் (1996) மறைந்தார். அவருக்கு 1998-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


ஃபிரிட்ஸ் ஜெர்னிகி

🔭 ஃபேஸ் கான்ட்ரஸ்ட் மைக்ரோஸ்கோப்பை (Phase-contrast microscopy) கண்டுபிடித்த ஃபிரிட்ஸ் ஜெர்னிகி (Frits Zernike) 1888ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் பிறந்தார்.

🔭 இவர் கண்ணாடி, கண்ணாடி கற்கள், வண்ணப் புகைப்படக்களம், டெலஸ்கோப் கண்ணாடிகளின் பிழைகள், பார்வைத் திறன் குறித்த ஆய்வில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

🔭 தனது ஆராய்ச்சிகள் மூலம் புகைப்பட கேமரா, சிறிய வானியல் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கினார். தன் மாணவர்களுடன் இணைந்து, லென்ஸ் முறைகளின் பிறழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

🔭 இவர் 1953-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஃபிரிட்ஸ் ஜெர்னிகி 78வது வயதில் (1966) மறைந்தார்.