நிகழ்வுகள் :-

👉 1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்ட ஜான் டால்ட்டன் மறைந்தார்.

👉 1938ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஒரு இந்திய தமிழ்க் கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்தார்.

1907ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழக எழுத்தாளர் மௌனி பிறந்தார்.

👉 1953ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது.


நினைவு நாள் :-

ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 
🌼 இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

🌼 இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகிணி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.

🌼 இவர் பத்மபூஷண்(1981), பத்மவிபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.

🌼 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக ஜூலை 25, 2002ல் பதவியேற்றார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

தேசிக விநாயகம் பிள்ளை
👉 தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.

👉 இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை 'கவிமணி' என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார். 

👉 மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

👉 இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78-வது வயதில் (1954) மறைந்தார்.


சோமசுந்தர பாரதியார்
👉 விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன்.

👉 இவர் ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். 1905ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டு வரை இவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.

👉 தமிழ் இலக்கண இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது தமிழ் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டு தமிழ்ப்புலவர் மன்றம் 'நாவலர்' என்ற பட்டத்தை வழங்கியது.

👉 தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80-வது வயதில் (1959) மறைந்தார்.