ஆற்காடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் மேல்விசாரம் கத்தியவாடி கூட்டுரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பங்க் கடையில் சிலர், காட்டன் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது காட்டன் சூதாட்டம் நடத்திய மேல்விசாரம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த சுலைமான் மகன் பாஷா(50), அதே தெருவை சேர்ந்த அப்துல்சமத் மகன் காலேஷா(52) ஆகிய 2 பேரையும் கைது செய்து காட்டன் சூதாட்டம் நடத்த பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் ரூ. 100யை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.