வேலூர் விருப்பாச்சிபுரம், வாணியகுளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(27) 2017-ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கடந்த 15-ம் தேதி பரோலில் சென்றவர் 19-ம் தேதி மாலை சிறைக்கு வரவேண்டும். ஆனால் இதுவரை வேல்முருகன் சிறைக்கு வரவில்லை. 

இது குறித்து வேலூர் மத்திய சிறைதுறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டின் பின்புரம் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடலை மீட்ட காவல் துறையினர் பிரேதபரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.