ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையத்திலிருந்து நேற்று மாலை செய்யாறு நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது. அதில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆற்காடு அடுத்த கீராம்பாடி அருகே சென்றபோது நிலைதடுமாறிய பஸ் சாலையில் கவிழ்ந்துள்ளது. 

இதில் பஸ்சில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். செய்யாறு பகுதியைச் சேர்ந்த இந்திரா (45), மதியழகன் (25), சண்முகம் (24), கணேசன் (30), அஜித்குமார் (23), அக்தர் (42) உள்பட 15 பேர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

அவர்களில் ஒரு சிலர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 10 பேர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த விபத்து குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.