வேலூர் சரகத்தில் பணியாற்றும் 27 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் பணியாற்றும் 27 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடலாடி மங்கையர்கரசி ஜோலார்பேட்டைக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த லட்சுமி, குடியாத்தம் நகரத்துக்கும், ராணிப்பேட்டை கலால் யுவராணி உம்ராபாத்துக்கும் அங்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் நிர்மலா, குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் மகளிர் ஆய்வாளர் நந்தினிதேவி பெரணமல்லூருக்கும், தேசூர் காவல் நிலையம் பாலசுப்பிரமணியன் ஆம்பூர் கிராமியத்துக்கும், அரக்கோணம் நகரம் முரளிதரன் கடலாடிக்கும், வேட்டவலம் நிலவழகன் வேலூர் கிராமியத்துக்கும், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகம் நந்தகுமார் வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் சைபர் குற்றப்பிரிவு சாலமன் ராஜா கண்ணமங்கலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

காவேரிப்பாக்கம் மகாலட்சுமி ராணிப்பேட்டை கலால் பிரிவுக்கும், லத்தேரி ஆய்வாளர் கவிதா போளூர் மகளிர் காவல் நிலையத்துக்கும், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் திருநாவுக்கரசு சோளிங்கர் காவல் நிலையத்துக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த ஜெயபிரகாஷ் போளூர் காவல் நிலையத்துக்கும், வேலூர் கிராமியம் அல்லிராணி ஆரணி மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆரணி மகளிர் ஆய்வாளர் ஷாகின் வேலூர் மகளிர் காவல் நிலையத்துக்கும், வேலூர் தெற்கு கலையரசி, செய்யாறு கலால் பிரிவுக்கும், போளூர் கோவிந்தசாமி பாணாவரத்துக்கும், வேலூர் தீவிர குற்றங்கள் தடுப்புப் பிரிவு-2 ஆய்வாளர் கவிதா திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவுக்கும், அரக்கோணம் மகளிர் ஆய்வாளர் புனிதா போளூர் கலால் பிரிவுக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த பிரகாஷ் கந்திலிக்கும், அரக்கோணம் கிராமியம் கோகுல்ராஜன் ஆரணி நகரத்துக்கும், கந்திலி மணிமாறன் காவேரிப்பாக்கத்துக்கும், பாணாவரம் லட்சுமிபதி கீழ்பென்னாத்தூருக்கும், திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு ஆய்வாளர் நாகராஜன், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், கீழ்பென்னாத்தூர் ஷியாமளா வேலூர் தெற்கு குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.