ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பேருந்து நிலையம் அருகே மதுபான கடையில் மது குடித்துவிட்டு போதையில் சாலையில் இருந்த பொதுமக்களை பீர் பாட்டில்களை காட்டி அச்சுறுத்தி வந்த சென்னை சேர்ந்த சாகயம் என்பவர் மகன் தாஸ்(எ) ஆதிபகவன் 27 விருத்தாச்சலத்தை சேர்ந்த காமராஜர் பழமலை நாதரின் மகன் கந்தவேல்(எ)சப்பை-21 சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரகாஷ் - 19 ஆகிய இந்த மூன்று இளைஞர்களும் சென்னையில் உள்ள துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார்கள்

இந்த நிலையில் இவர்கள் சென்னையில் இருந்து வேலூருக்கு பஸ்களில் சென்று கொண்டு இருந்தனர் அப்போது ஓச்சேரி பஸ் வந்தபோது அந்த இளைஞர்கள் அங்கு இறங்கி அருகே உள்ள மது கடைக்கு சென்று மது குடித்துவிட்டு அந்த இளைஞர்கள் மதியம் சுமார் 1. 00 மணி அளவில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போதையில் கையில் இருந்த பீர் பாட்டிலை வைத்து கொண்டு ஆபாசமாக பேசியும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர் 

பிறகு பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களில் சிலர் போலிசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த அவளூர் காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் எஸ். எஸ். ஐ. ரவி ஆகியோர் தலைமையில் பேருந்து நிலையத்தில் போதையில் தகராறில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.