ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கரியகுடல் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் பிரணாப் (வயது 24). இவர் கடந்த 27-ந் தேதி நெமிலியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.90 ஆயிரம் எடுத்தார். அந்த பணத்தில் ரூ.70 ஆயிரத்தை ஒரு பகுதியிலும், ரூ.20 ஆயிரத்தை ஒரு பகுதியிலும் தனது ஸ்கூட்டியின் சீட்டுக்கு அடியில் வைத்து எடுத்து சென்றுள்ளார்.

அப்போது மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்ததால், நெமிலி பஜார் சத்திர தெருவில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள்திருடிச்சென்று விட்டனர். ரூ.20 ஆயிரம் மட்டும் தப்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.