BHEL employee union executives protest against not providing proper food
ராணிப்பேட்டை பேல் தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள், உணவகத்தில் சரியான முறையில் உணவு வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே பேல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்குப் பணிபுரியும் பேல் ஊழியர் சங்க நிரந்தர தொழிலாளர்களுக்குக் கடந்த சில மாதங்களாக நாள்தோறும் சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் உணவு மற்றும் சிற்றுண்டி, டீ, காபி, பிஸ்கட் வழங்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்க நிரந்தர தொழிலாளர்கள் பேல் நிறுவன நுழைவு வாயிலில் நேற்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேல் ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.