ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் ஏ ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு தாய்ப்பால் வார விழா பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் வாசுகி (ராணிப்பேட்டை ) தேன்மொழி (நெமிலி ) ஷாலினி (காவேரிப்பாக்கம் ) பகவதி (அரக்கோணம்) அன்பரசி( சோளிங்கர்) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்