வேலுாரில் ஆற்காடு செல்வதற்காக நின்றிருந்த அரசு பஸ்சில் உள்ள ரேடியேட்டரில் சுடு தண்ணீர் தெறிந்ததால், டிரைவர், கண்டக்டர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். 
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் இருந்து வேலுார் மாவட்டம், வேலுாருக்கு நேற்று இரவு 9:00 மணிக்கு அரசு டவுன் பஸ் வந்தது. வேலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கிவிட்டபின் ஆற்காடு செல்ல பயணிகள் பஸ்சில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது, வேலுாரை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன், ரேடியேட்டரில் தண்ணீர் உள்ளதா? என திறந்து பார்த்தார். 

அப்போது அதிலிருந்த சுடு தண்ணீர் டிரைவர் வெங்கடேசன், 40, கண்டக்டர் முருகன், 35, மற்றும் 3 பயணிகள் மீது தெறித்தது. அதில் அவர்கள் காயமடைந்தனர். அப்போது ஆய்வுக்காக அங்கு வந்த போக்குவரத்து பொது மேலாளர் நடராஜன், அவர்களை மீட்டு வேலுார் அரசு பென்லென்ட் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 

பின்னர் மாற்று டிரைவர், கண்டக்டர் மூலம் அந்த பஸ் ஆற்காட்டிற்கு இயக்கப்பட்டது