ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை அல்லது நள்ளிரவு கன மழை பெய்யும் என்றும், இன்று மாலை தரைக்காற்று உள் மாவட்டங்களில் உருவாகி, பின்னர் இந்த காற்றின் சங்கமம் கடலோரத்தை நோக்கி நகரும் வேளையில், மாலை உள் மாவட்டங்கள், பின்னர் இரவு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.