Hindu Religious and Charitable Endowments Department Recruitment 2021 (இந்து சமய அறநிலையத் துறை)

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்‌ திருக்கோயிலில்‌ கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தக்கார்‌ தீர்மானத்தின்படி பணியாளர்கள்‌ நியமனம்‌ செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிட விபரங்கள்:

1. தட்டச்சர்

2. அர்ச்சகர் (உபகோயில்)

3. பரிசாரகர்

4. மேளம் செட்

5. காவலர்

6. இரவு காவலர்

7. திருவலகு

8. கால்நடை பராமரிப்பாளர்

9. ஓதுவார்

மொத்த எண்ணிக்கை: 09 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

1. தட்டச்சர்

1. பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும்‌

2. அரசு தொழில்நுட்ப தட்டச்சர்‌ தேர்வில்‌ தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்‌.

(i) தமிழ் மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ முதுநிலை (அல்லது) (ii) தமிழில்‌ முதநிலை மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ இளநிலை (அல்லது) (iii) ஆங்கிலத்தில்‌ முதுநிலை மற்றும்‌ தமிழில்‌ இளநிலை ஆனால்‌, இனம்‌ (i) இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை விண்ணப்பதாரர்‌ பெறாத நேர்வில்‌, இனம்‌ (ii) இல்‌ அல்லது (iii) இல்‌ உள்ள தகுதிகளைக்‌ பெற்ற விண்ணப்பதாரர்கள்‌ மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில்‌ நியமிக்கப்படலாம்‌. கணிணி பயன்பாடு மற்றும்‌ அலுவலகத்‌ தானியக்கத்தில்‌ சான்றிதழ்‌ படிப்பில்‌ தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட படிப்பில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

2. அர்ச்சகர் (உபகோயில்)

1) தமிழில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌; மற்றும்‌

2. யாதொரு சமய நிறுவனங்களால்‌ அல்லது அரசு நிறுவனங்களால்‌ அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால்‌ நடத்தப்படும்‌ ஆகமப்‌ பள்ளி அல்லது வேதபாட சாலையில்‌ தொடர்புடைய துறையில்‌ ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

3. பரிசாரகர்

பத்தாம்‌ வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்‌ அல்லது அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்‌. 1) தமிழில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌ மற்றும்‌ 2) கோயிலின்‌ பழக்க வழக்கத்திற்கேற்ப நைவேத்யம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயாரிக்கத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌ மற்றும்‌ 3) பூஜை மற்றும்‌ சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்‌.

4. மேளம் செட்

தமிழில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌; மற்றும்‌ யாதொரு சமய நிறுவனங்கள்‌ அல்லது அரசு நிறுவனங்கள்‌ அல்லது ஏனைய யாதொரு அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால்‌ நடத்தப்படும்‌ இசைப்‌ பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில்‌ சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

5. காவலர்

தமிழில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.

6. இரவு காவலர்

தமிழில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.

7. திருவலகு

தமிழில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.

8. கால்நடை பராமரிப்பாளர்

தமிழில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.

9. ஓதுவார்

1) தமிழில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. மற்றும்‌ 2) சமய நீறுவனங்களால்‌ அல்லது அரசு நிறுவனங்களால்‌ அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால்‌ நடத்தப்படும்‌ தேவாரப்‌ பாடசாலையில்‌ இது தொடர்புடைய துறையில்‌ குறைந்தபட்சம்‌ மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌

வயது வரம்பு:

01-07-2021 ன் படி 18 வயது பூர்த்தியானவராகவும்‌ 85 வயது பூர்த்தியடையாதவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. இதர விபரங்கள்‌ அலுவலக நாட்களில்‌ அலுவலக நேரத்தில்‌ நேரில்‌ வந்து தெரிந்து கொள்ள வேண்டும்‌.

சம்பள விகிதம்:

1. தட்டச்சர்

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 15 ன் படி ரூ. 15,300/- வழங்கப்படும்.

2. அர்ச்சகர் (உபகோயில்)

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 12 ன் படி ரூ. 11,600/- வழங்கப்படும்.

3. பரிசாரகர்

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 14 ன் படி ரூ. 13,200/- வழங்கப்படும்.

4. மேளம் செட்

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 15 ன் படி ரூ. 15,300/- வழங்கப்படும்.

5. காவலர்

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 12 ன் படி ரூ. 11,600/- வழங்கப்படும்.

6. இரவு காவலர்

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 10 ன் படி ரூ. 11,600/- வழங்கப்படும்.

7. திருவலகு

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 12 ன் படி ரூ. 10,000/- வழங்கப்படும்.

8. கால்நடை பராமரிப்பாளர்

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 12 ன் படி ரூ. 11,600/- வழங்கப்படும்.

9. ஓதுவார்

மாத ஊதியமாக ஊதிய அட்டவணை எண். 13 ன் படி ரூ. 12,600/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில்‌ அலுவலகத்தில்‌ நேரில்‌ வந்து ரூ. 100/-ஐ செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்‌. படிவங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின்‌ சான்றொப்பத்துடன்‌ இணைத்து விண்ணப்பங்களை கீழ்குறிப்பிட்ட முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அல்லது நேரடியாகவும் சமர்பிக்கலாம்.

குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் பின்னர்‌ வரப்பெறும்‌ விண்ணப்பங்களும்‌ தேவையான விபரங்கள்‌ மற்றும்‌ இணைப்புகளுடன்‌ வரப்‌பெறாத விண்ணப்பங்களும்‌ வேறு வகையில்‌ உருவாக்கப்பட்ட விண்ணப்பங்களும்‌ நிராகரிக்கப்படும்‌.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்து சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக அல்லது அவர்களின் மொபைல் எண்ணிற்கோ தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 20.09.2021 மாலை 5.45 மணிவரை

1. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காண (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

2. இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

3. விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்,

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்‌ திருக்கோயில்‌,

315, தங்கசாலை தெரு, சென்னை – 3.