இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் காஞ்சிபுரம் வேலை வாய்ப்புகள் 2021 Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM) Kanchipuram Recruitment 2021
முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை – காஞ்சிப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (Indian Institute of Information Technology Design and Manufacturing -IIITDM, Kancheepuram) காலியாக உள்ள பணியிடத்தினை தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிட விபரங்கள்:

1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)

கல்வித் தகுதி:

அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து B.E./ B.Tech./ B.Des. பட்டத்தை முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விகிதம்:

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 30,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற் குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழ் குறிப்பிட்டுள்ள கூகுல் டாக்ஸ் விண்ணப்ப படிவத்தின் மூலமாக ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றலாம். மேலும்

பையோடேட்டா மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்கள்/கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் அதன் நகல் மற்றும் சமீபத்திய புகைப்படத்துடன் கீழ் குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தேர்வுக் குழு முன் ஆஜராக வேண்டும்

அவர்களுடன் உயிர் தரவு மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்கள்/கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவம் அதன் நகல் மற்றும் 03.09.2021 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 9:30 மணிக்கு.

மற்றும் அவர்களுடன் தேர்வு குழு முன் ஆஜராகவும் 03.09.2021 அன்று நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்கான சமீபத்திய புகைப்படத்துடன் (வெள்ளிக்கிழமை) காலை 9:30 மணிக்கு.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்: 02.09.2021 மாலை 5.00 மணிக்குள்‌

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 03.09.2021 காலை 9.30

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Administration Section Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600 127 Contact No: 044-27476300/6312, Email [email protected], Website: www.iiitdm.ac.in

IIITDM அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் (கூகுல் டாக்ஸ்) மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்