குற்றச்சம்பவங்கள் தகவல் தர உதவி மையம் திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, சட்டவிரோத செயல்கள், ரவுடியிசம், காவலர்களின் ஒழுங்கீன நடவடிக்கை மற்றும் லஞ்சம் தொடர்பான ரகசிய தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் தெரிவிக்க பொது மக்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
இதற்காக மொபைல் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7530026333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதனை ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் வெளியிட்டார். 

இதில், தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி., தீபாசத்யன் கூறினார்.