நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் பிற துறை அலுவலர்களுக்கான நெமிலி வட்டார முதலீட்டு திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது . இதற்கு மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் திரு.கங்காதரன் தலைமை வகித்தார் . மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ( கி.ஊ ) மற்றும் ( வ.ஊ ) , உதவி திட்ட அலுவலர் மற்றும் வட்டார இயக்க மேலாளர் TNSRLM , வேளாண்மை உதவி இயக்குனர் , தோட்டக் கலைத் துறை உதவி இயக்குனர் , கால்நடை பராமரிப்புதுறை ஆகியோர் முன்னிலை வகித்தனர் . அணித்தலைவர் ( பொறுப்பு ) சங்கர் அனைவரையும் வரவேற்றார் . ஊரக புத்தாக்க திட்டத்தின் செயல் அலுவலர் ( தொழில் முனைவு ) நித்தியானந்தம் சிறப்புரை ஆற்றினார் . 

அப்பொழுது வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டு செய்வதின் நோக்கம் குறித்தும் , தொழில்நுட்ப பயிற்சி , உற்பத்தியாளர் குழுவின் மூலம் இடுபொருட்களை மொத்தமாகக் கொள்முதல் மற்றும் விற்பனை செய்தல் , தரமான பொருட்களை உற்பத்தி செய்யும்முறை , தனிநபர் மற்றும் உற்பத்தியாளர் / தொழில் குழுவிற்கு தேவையான உரிமங்கள் , சான்றிதழ்கள் பெறும் நோக்கங்கள் , பிறதுறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெறும் நோக்கங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது . 

இதில் செயல் அலுவலர் ( வணிக நிதி ) வாசு , வட்டார வங்கி மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் . திட்ட செயலாக்கர் ( கணக்கு மற்றும் நிர்வாகம் ) சிவநேசன் நன்றி கூறினார் .