ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் தீபா சத்யன் நியமிக் கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், மதுரை 6-வது பட்டாலியன் கமாண்டராகவும், சென்னை ரயில்வே கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த டாக்டர் தீபா சத்யன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 100 நாட்களில் மூன்று காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.