People are happy to find big fish in the lake 
ராணிப்பேட்டை: பாணாவரம் அருகே ஏரியில், பெரிய மீன்கள் கிடைத்தததால் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அள்ளிச் சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே வெடலவாடி ஏரி கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் 3 அடிக்குத் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், இன்று காலைப் பெரிய அளவிலான மீன்கள் ஏரி தண்ணீரில் மிதந்து சென்றன. தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏரியில் இறங்கி மீன்களைப் பிடித்தனர்.

அப்போது 10 கிலோ எடையுள்ள பெரிய மீன் ஒருவருக்கு சிக்கியது. அதேபோல 7 கிலோ, 5 கிடை எடையுள்ள மீன்களையும் பிடித்துச் சென்றனர். நிறைய பேர் கோணிப்பைகள் கொண்டு வந்து மீன்களைப் பிடித்துச் சென்றனர். 

இதுகுறித்து மீன்வளத்துறையினர் கூறியதாவது: சமீபத்தில் பெய்த மழையால் இந்த ஏரிக்குப் புதிய மழை தண்ணீர் வந்ததால், ஏராளமான மீன்கள் உற்பத்தியானது. அதில், அதிக எடையும், ருசியானதுமான கெண்டை மீன்கள் அதிகம் உள்ளது. இந்த வகை மீன்களைப் பிடித்துச் சென்று ஒரு கிலா 400 ரூபாய்க்கு விற்றனர். இந்த ஏரியில் மீன்கள் பிடிக்க ஏலம் விடாததால் மக்கள் பிடித்துச் சென்றனர். 

இன்னும் சில நாட்கள் இங்கு மீன்கள் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.