ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோளிங்கர் வட்டம் வேலம் கிராமம் அருந்ததி வீதி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் எங்கள் கிராமத்தில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆற்காடு சோளிங்கர் இணைப்பு சாலை செல்லும் சாலை உள்ளது இதில் எங்கள் ஊரில் விழாக்காலங்களில் மின்சார விளக்கு அலங்காரம் செய்து திருவிழா நடத்தி வந்தோம் இதை அருகில் உள்ள மாற்று சமூகத்தினர் சாலை ஓரத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்வது தடுத்து நிறுத்துகின்றனர்.

மேலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலை அருகில் உள்ள மர நிழலிலும் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் அருகிலும் எங்களை நிற்கவோ உட்காரக் கூடாது என்றும் ஆட்சேபனை செய்து அச்சுறுத்துகின்றனர்.

ஆகையால் 50 ஆண்டு காலமாக நாங்கள் பயன்படுத்திவரும் சாலையை தொடர்ந்து அனுபவித்து வர சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது