வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை வழியாக செல்லும் வேலூரின் முக்கிய நீராதரங்களில் ஒன்றான பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநில வனப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழையால் பொன்னை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள அணையின் இருபுறங்களிலும் உள்ள பாசன கால்வாய்களில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஏரிகளுக்கு நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள்.