தமிழ்நாட்டில் முதல் முறையாக விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 100ஆவது நாளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது கூடுதல் சிறப்பு. பொதுப் பட்ஜெட் அறிக்கையைப் போலவே விவசாயப் பட்ஜெட் அறிக்கையும் சட்டசபையில் டிஜிட்டல் பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட உள்ளது.
கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களை தொடர்ந்து 3வதாக தமிழ்நாடு இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் துறைக்கான பட்ஜெட் அறிக்கையை இத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும் முக்கியமான அம்சங்கள் என்ன..

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டினை காணிக்கையாக்குகிறேன் என குரி பட்ஜெட் உரையை தொடங்கியுள்ளார் அமைச்சர் பன்னீர்செல்வம். நேற்று தமிழகத்தின் முழு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார் பழனிவேல் தியாகராஜன். இந்த நிலையில் முதல் காகிதமில்லா பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டது. அதனை போலவே இன்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



வேளாண் துறைக்கு கடந்த 2011 - 2026 வரையில் 23,960.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 2016 - 2021 வரையில் 35,588 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சூழலில் 2020 - 21ம் நிதியாண்டில் மட்டும் 11,982.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இன்னும் கூடுதல் தொகையை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.


தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து பின்னரே இந்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தவிர, வேளாண் வணிகர்களையும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

வேளாண் துறையினரை பெருமிதப்படுத்தும் விதமாக வேளாண் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இன்றைய காலக்கட்டத்தில் மனித நாகரீகம் பன் மடங்கு வளர்ந்தாலும் உணவின்றி உயிர்வாழ இயலாது என வேளாண் பட்ஜெட்டில், விவசாயத்தில் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்துள்ளார் பன்னீர்செல்வம்.

வேளாண் பட்ஜெட் என்பது தொலை நோக்கு திட்டமாகும். விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருவதால், விவசாய நிலப்பரப்பின் அளவு குறைந்து வருகின்றது. ஆக இந்த விவசாய நிலபரப்பினை 75% ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
இயற்கை விவசாய வேளாண் பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், இயற்கை வேளாண்மைக்கு என ஒரு தனிப்பிரிவ உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் என்பது நடப்பு ஆண்டு முதல் தொடங்கப்படும். இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை வேளாண் உரங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.

இயற்கை விவசாயிகள் சன்றிதல்

இயற்கை விவசாயிகள் பட்டியலை எடுத்து, அவர்களுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழும் வழங்கப்படும்.

பண்டைய தமிழகர்களின் பாரம்பரிய தொழிலாளான பனை உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக பனை விதைகள் மற்றும் பனை விதைப்புகளுக்கு மானியம் வழங்கவும் உத்தவிரப்பட்டுள்ளது.


கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டம் மூலம் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதலை அதிகப்படுத்தவும், சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க ஊக்குவிக்கப்படும். இது தவிர கால் நடை விவசாயிகளை ஊக்குவித்து பால் உற்பத்தியினை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்கவும் வழிவகை செய்யப்படும். இதற்கான சந்தைகளை ஊக்கப்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தினை செயல்படுத்த 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.



இன்றைய இளம் தலைமுறையினருக்கு கணினி போன்ற தொழில் நுட்பங்களை தெரிந்த அளவுக்கு கூட, வேளாண்மை பற்றி தெரிவதில்லை. இதனால் விவசாயத்தில் ஈடுபாடு என்பது வெகுவாக குறைந்துள்ளது. இதனை மாற்றவும், விவசாயத்தினை ஊக்கப்படுத்தவும் ஊரக இளைஞர் வேளாண் மேம்பாட்டு திட்டம், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.


இன்று உலகம் முழுக்க இந்தியாவின் மரபுசார் நெல் ரகங்களுக்கு பெரும் வரவேற்புண்டு. ஆனால் இந்தியாவில் இது சிறிது சிறிதாக மாற்றம் கண்டு வருகின்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக இன்றைய பட்ஜெட்டில் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க

இந்த பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க இயற்கை வேளாண்மை அமைப்பு செயல்படும். மேலும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விதைப்பண்னைகளில் சுமார் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.


கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்த டன் ஒன்றுக்கு 42.50 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இது தவிர மானவரி விவசாயிகளுக்கு ஊக்கத்தினை அளிக்கும் வகையில், மானாவாரி நிலங்களில் மரக்கன்றுகளை வளர்க்க நிதியுதவி அளிக்கடும். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பயறு வகைகளை மதிய உணவுத் திட்டத்திக் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கவிப்பட்டுள்ளது. இதன் மூலம் பயறு கொள்முதல் அதிகரிக்கலாம் என அரசு திட்டமிடுவது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தியினை அதிகரிக்க சன்ன ரகத்திற்கு 70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவுன்ம், சாதாரண ரகத்திற்கு 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 2,060 ரூபாய்க்கும், சாதாரண ரக நெல் 2,015 ரூபாய்க்கும் கொடுக்கப்படும்.


இன்றைய காலக்கட்டத்தில் விவசாயிகள் பலரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை, விளைவித்த நெல்லை சரியான முறையில் பாதுகாக்க முடிவதில்லை. மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. அதனை தடுக்க அறுவடைக்கு பிறகு இழப்புகளை தவிர்க்க 52.02 கோடி ரூபாயில் விவ்சாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

தென்னை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக தஞ்சாவூரில் தென்னை மதிப்பு கூட்டு மையம் தொடங்கப்படும். இதே பருத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பருத்தி இயக்கத்திற்கு 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என இன்றைய வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


பல துறைகளுக்கு அருங்காட்சியகம் இருந்தாலும், வேளாண்மை துறைக்கு என தனியாக இல்லை. ஆக விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மை துறைக்கு தனி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

இது இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தினை பற்றி தெரிந்து கொள்ள முக்கிய அம்சமாக இருக்கும். இதற்காக சென்னையில் அமைக்கபட விருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் அரவை இயந்திரம், பாரம்பரியமிக்க நெல் ரகங்கள், பாரம்பரிய கால் நடைகளின் புகைப்படங்கள், உள்ளூர் பயிர் ரகங்கள், வேளாண்மை துறை சம்பந்தமான இயந்திரங்கள் உள்ளிட்ட பலவும் காட்சிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இயற்ககை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுபவர்களை அரசு கெளரவிக்கும். குறிப்பாக பாரம்பரிய உற்பத்தி முறையினை கையாண்டு உற்பத்தியினை அதிகரிக்கும் விவசாயிகளை சிறப்பிக்கும். புதிய விவசாயம் சம்பந்தமான இயந்திரங்களை கண்டுபடிக்கும் விவசாயிகளையும் அரசு ஊக்குவிக்கும்.
விவசாய துறைக்கு ஒதுக்கீடு

50 உழவர் சந்தைகளின் தரத்தினை ஆய்வு செய்து மேம்படுத்த 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு வேளான் கருவிகளுக்கு வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

குறிப்பாக விவசாயிகளின் நல்ன கருதி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2,327 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இன்று பெரியளவில் உதவிகரமாக இருக்கும் இலசவ மின்சாரத்தினை வழங்க 4,508 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சோலார் பம்புசெட்டுகளை உருவாக்க 114 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.