ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மதுபோதையில் தொடர்ந்து சண்டையிட்டு வந்த அண்ணணை கொலை செய்த தம்பியை, போலீசார் தேடி வருகின்றனர்.

காவனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி, மகன்கள் தேவநாராயணன், கணபதி உடன் வசித்து வந்த நிலையில் தேவநாராயணன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என கூறி தாய் லட்சுமியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவும் தேவநாராயணன், மதுபோதையில் தாயுடன் சண்டையிட்ட போது, ஏற்பட்ட தகராறில் இளைய மகன் கணபதி தேவநாராயணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிசென்றதாக போலீசார் தேடி வருகின்றனர்.