ஊரக புத்தாக்க திட்டத்தின்‌ கீழ்‌ கிராமப்புற பெண்கள்‌ சுயதொழில்‌ செய்யக்கிராமப்புற பெண்களுக்குப் பயிற்சி மற்றும்‌ ஆலோசனை வழங்கப்பட்டது.

ஊரக புத்தாக்க திட்டத்தின்‌ கீழ்‌ கிராமப்புறங்களில்‌ 'தொழில்‌ வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு, முகாம்கள்‌ நடத்தி ஆலோசனைகளும்‌ வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வாலாஜா வட்டார வளர்ச்சிதிட்ட கருத்தரங்கம்‌ பிடிஓ அலுவலகத்தில்‌ நேற்று முன்தினம்‌ நடைபெற்றது.

மாவட்ட செயல்‌ அலுவலர்‌ கங்காதரன்‌ தலைமை தாங்கினார்‌. பிடிஒக்கள்‌ சீனிவாசன்‌, சித்ரா ஆகியோர்‌. முன்னிலை வகித்தனர்‌. வட்டார செயல்‌அலுவலர்‌ ஜெயக்‌குமார்‌, பழனிச்சாமி ஆகியோர்‌ கிராமப்புற பெண்களுக்குச்சுயதொழில்‌ செய்வதற்கான பயிற்சி மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்கினர்‌.

தொடர்ந்து, வேளாண்‌ பொருட்களை மதிப்பு கூட்டுதல்‌ மூலம்‌ சந்தைப்படுத்துதல்‌ குறித்து விளக்கம்‌: அளிக்கப்பட்டது. முடிவில்‌ வட்டார அணித் தலைவர்‌ ஜீவசெந்தில்நாதன்‌ நன்றி கூறினார்‌.


Training for rural women to become self-employed under the Rural Innovation Program