ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ராமாபுரம் கிராமம் சமத்துவபுரத்தில் வசிப்பவர் ஜனார்த்தனன் 30 என்பவரின் பசுமாட்டை மர்ம நபர் நேற்று இரவு திருடிவிட்டதாக ஜனார்த்தனன் அவளூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்

அதன்பேரில் போலீசார் பனப்பாக்கத்தில் உள்ள அருந்ததி பாளையத்தை சேர்ந்த துருவன் என்பவரின் மகன் எழிலரசன் என்பவர் நேற்று முன்தினம் ஜனார்த்தனன் வீட்டின் வெளியே கட்டி வைத்திருந்த பசுமாட்டை திருடி சென்று விட்டதாக தெரிவித்தார் 

அதன்பேரில் போலீஸார் எழிலரசனை கைது செய்து அவரிடமிருந்த பசுமாட்டை மீட்டு நீதிமன்ற வாழிலாக உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் என்று போலீசார் பசுமாட்டியின் உரிமையாளரிடம் உறுதியளித்தார்

பிறகு பசுமாட்டை திருடிய நபரை அவளூர் போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.